
இன்றைய ராசி பலன்
சந்திரனின் கோசாரப்படி மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் இன்றைய பலன்கள் – தமிழில், தினமும் புதிதாக.
- 12 ராசிகள்
- சந்திர கோசாரம்
- சந்திராஷ்டமம்
- தினமும் புதிது
வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2026 – இன்றைய ராசி பலன்
இன்று சந்திரன் சஞ்சரிக்கும் ராசி: மிதுனம்
| ராசி பெயர் | ராசி பலன் |
|---|---|
| மேஷம்Mesham · Ariesசந்திரன்: 3-ஆம் வீடு | சந்திரன் மூன்றாம் வீட்டில் சஞ்சரிப்பது நல்ல பலன்களை தர வல்லதாகும். நண்பர்கள், உறவினர்கள், முதியோர், சகோதர சகோதரிகளின் ஆதரவு இருக்கும். இந்த நேரம் உங்களை துணிவு மிக்கவராக செய்யும். எந்த காரியத்தையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள் |
| ரிஷபம்Rishabam · Taurusசந்திரன்: 2-ஆம் வீடு | சந்திரன் இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இது பொருளாதார சிக்கல்களுக்கு வழி வகுக்கலாம். இந்த நேரம் ஏமாற்றம் தரவல்லது; மேலும் தன்னம்பிக்கை அளவில் குறையக்கூடும். குடும்பத்தில் குழப்பங்கள் நேரிடலாம். ஆழ்ந்த இறை வழிபாடும், முன் வினைகளுக்கு மன்னிப்பு கோருதலும் பிரச்சினைகளின் தீவிரத்தை குறைப்பதற்கு வழி வகுக்கும். |
| மிதுனம்Mithunam · Geminiசந்திரன்: 1-ஆம் வீடு | சந்திரன் முதல் வீட்டில் நிற்பது ராசியானதாகும். நீங்கள் நிறைவாகவும், சந்தோஷமாகவும் இருப்பீர்கள். இது கடவுள் வழிபாட்டிற்கு ஒரு உன்னதமான நேரமாகும். |
| கடகம்Kadagam · Cancerசந்திரன்: 12-ஆம் வீடு | சந்திரன் பன்னிரண்டாம் வீட்டில் சஞ்சரிப்பது செலவுகளை அதிகரிக்கும். இந்த வேளையில், மரியாதை மற்றும் கௌரவத்திற்கு பங்கம் விளைவிக்கும் நிகழ்வுகள் ஏற்படலாம். சண்டை சச்சரவுகளில் ஈடுபடாமல் இருப்பது உசிதம். இந்த நேரத்தில் மூளை திறன் குறையலாம்; சோம்பல் மிகலாம். எதோ தவறு நடக்கபோவதாக மனதில் ஒரு எண்ணம் தோன்றி, அதுவே மன அழுத்தம் கூடுவதற்கு ஒரு காரணமாக அமையலாம். இறை உணர்வு எப்போதும் மனதில் கொள்ளவும். |
| சிம்மம்Simmam · Leoசந்திரன்: 11-ஆம் வீடு | சந்திரன் பதினோராம் வீட்டில் சஞ்சாரம் செய்வது ஜாதகருக்கு மிக அனுகூலமான நேரமாகும். நல்ல பலன்கள் உண்டாகும் மற்றும் மன மகிழ்ச்சி மிகும். எதிரிகளை வெல்லும் நிலை உண்டாகும். மேலும் நீண்ட காலமாய் நடந்து வரும் வழக்குகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகலாம். இந்த நேரத்தில் உங்கள் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண்ணின் பங்களிப்பு உண்டாயிருக்கும். |
| கன்னிKanni · Virgoசந்திரன்: 10-ஆம் வீடு | பத்தாம் வீடு வாழ்வாதாரத்தை குறிக்கிறது. சந்திரன் பத்தாம் வீட்டில் இருப்பது வியாபார மற்றும் வேலையிடத்தில் அனுகூலமான பலன்களை தரவல்லது. கடினமாக உழைப்பீர்கள்; மேலும் வலிமையாக இருப்பதாய் உணர்வீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு மற்றும் உதவி இருக்கும். இந்த நேரத்தில் நல்ல சிந்தனைகளும், ஒழுக்க குணங்களும் கொண்டிருப்பீர்கள். |
| துலாம்Thulam · Libraசந்திரன்: 9-ஆம் வீடு | ஒன்பதாம் வீட்டை சந்திரன் கடக்கும் பொழுது, பிள்ளைகளின் ஆதரவு குறையலாம். வேலையிடத்தில் தடங்கல்கள் வரலாம். அதிர்ஷ்டம் குறையலாம். மற்றவர்களின் சொல் கேட்டு நடக்கும் நிலை ஏற்படலாம். ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு, இறை வழிபடுவது நல்ல பலன்களை தரும். |
| விருச்சிகம்Viruchigam · Scorpioசந்திரன்: 8-ஆம் வீடுசந்திராஷ்டமம் | சந்திரன் எட்டாம் இடத்திற்கு சஞ்சரிப்பது உடல் நலம் சம்பந்தமான பிரச்சினைகளை தரலாம். நல்லதல்லாத சேதிகள் மூலம் மன அழுத்தம் வருவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. இந்த நேரத்தில் சண்டை, சச்சரவுகளில் இருந்து விலகி நிற்பது மிக நல்லது. மூட்டு வலி ஏற்படலாம். |
| தனுசுDhanusu · Sagittariusசந்திரன்: 7-ஆம் வீடு | சந்திரன் ஏழாம் வீட்டில் சஞ்சரிப்பது நல்ல பலன்களை விளைவிக்க வல்லது. மிக சந்தோஷமான நேரம் இது. வருமானம் கூட நல்ல வாய்ப்பு உள்ளது; புகழ் உங்களை தேடி வரலாம். வேலையிடத்தில் வெற்றி உண்டாகும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு உண்டாகும். |
| மகரம்Magaram · Capricornசந்திரன்: 6-ஆம் வீடு | சந்திரன் ஆறாம் வீட்டில் இருப்பது ஆரோக்கியமான உடல் நலத்தை கொடுக்கும். முயற்சிகள் வெற்றிக்கு வழி வகுக்கும். செலவுகள் குறையும், சேமிப்பு கூடும். மன மகிழ்ச்சி கூடிடும்; மேலும் முயர்ச்சிக்கேற்ற பலன்கள் உண்டாகும். எதிரிகள் தீங்கு விளைவிக்க முனைய மாட்டார்கள். |
| கும்பம்Kumbam · Aquariusசந்திரன்: 5-ஆம் வீடு | சந்திரன் ஐந்தாம் இடத்தில் சஞ்சரிப்பது இருமல் மற்றும் பித்தப்பை, வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கு வழி வகுக்கலாம். இது கவனமாக இருக்க வேண்டிய நேரம். ஆழ்ந்த இறை சிந்தனை பிரச்சினைகளை நேரிடும் மன தைரியத்தையும், பிரச்சினைகளுக்கான தீர்வையும் அளிக்க வல்லது. |
| மீனம்Meenam · Piscesசந்திரன்: 4-ஆம் வீடு | சந்திரன் நாலாம் வீட்டில் இருக்கிறார். இது மன அமைதியை கெடுக்கவல்லது. உடல் நிலை பாதிக்கப்படலாம். உணவில், செயலில் கவனம் தேவை. |
ராசி பலன் என்றால் என்ன?
நீங்கள் பிறந்த நேரத்தில் சந்திரன் இருந்த ராசியே உங்கள் ஜென்ம ராசி. அந்த ராசியிலிருந்து இன்று கிரகங்கள் எத்தனையாவது வீட்டில் சஞ்சரிக்கின்றன என்பதைக் கொண்டு சொல்லப்படுவதே கோசார பலன் அல்லது ராசி பலன். ஒன்பது கிரகங்களில் மிக வேகமாக நகர்வது சந்திரன்; அது சுமார் இரண்டே கால் நாட்களுக்கு ஒருமுறை ராசி மாறுவதால், தினசரி ராசி பலனுக்கு சந்திரனின் கோசாரமே அடிப்படை.
இன்றைய ராசி பலன் எப்படி கணிக்கப்படுகிறது?
இந்த நேரத்தில் சந்திரன் இருக்கும் ராசி (நிராயன முறை, லஹிரி அயனாம்சம், சுவிஸ் எபிமெரிஸ்) ஒவ்வொரு ராசியிலிருந்தும் எத்தனையாவது வீடு என்று எண்ணப்படுகிறது – உங்கள் ராசியே முதல் வீடு. அந்த வீட்டிற்குரிய பலன் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. சந்திரன் 1, 3, 6, 7, 10, 11-ஆம் வீடுகளில் சஞ்சரிக்கும்போது நல்ல பலன்கள் உண்டு; மற்ற வீடுகளில் கலவையான பலன்கள். 8-ஆம் வீட்டில் இருக்கும் நாட்கள் சந்திராஷ்டமம் – அன்று புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
ஒவ்வொரு ராசியின் பெயரையும் தொட்டால் அந்த ராசிக்கான தனிப் பக்கம் (ஆங்கிலத்தில்) திறக்கும்; அதில் இன்று சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியவை உங்கள் ராசியிலிருந்து எந்த வீட்டில் உள்ளன, ஏழரைச் சனி நடக்கிறதா என்பதையும் காணலாம்.
ராசியும் நட்சத்திரங்களும்
| ராசி | அதிபதி | நட்சத்திரங்கள் |
|---|---|---|
| மேஷம் | செவ்வாய் | அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ஆம் பாதம் |
| ரிஷபம் | சுக்கிரன் | கார்த்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள் |
| மிதுனம் | புதன் | மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் |
| கடகம் | சந்திரன் | புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் |
| சிம்மம் | சூரியன் | மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் |
| கன்னி | புதன் | உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள் |
| துலாம் | சுக்கிரன் | சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள் |
| விருச்சிகம் | செவ்வாய் | விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை |
| தனுசு | குரு | மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் |
| மகரம் | சனி | உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் |
| கும்பம் | சனி | அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள் |
| மீனம் | குரு | பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி |
உங்கள் ராசி தெரியவில்லை என்றால், பிறந்த தேதி, நேரம், இடம் கொண்டு இலவச தமிழ் ஜாதகம் கணித்து அறிந்துகொள்ளலாம். இதே பலனை ஆங்கிலத்தில் Today Rasi Palan பக்கத்தில் படிக்கலாம்.
மேலும் பார்க்க
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
View All FAQsஇன்றைய ராசி பலன் எதை அடிப்படையாகக் கொண்டது?
இப்போது சந்திரன் இருக்கும் ராசியை உங்கள் ராசியிலிருந்து எண்ணி வரும் வீட்டைக் கொண்டு (சந்திர கோசாரம்) இந்தப் பலன் சொல்லப்படுகிறது. சந்திரனின் நிலை சுவிஸ் எபிமெரிஸ் மூலம் லஹிரி அயனாம்சப்படி கணிக்கப்படுகிறது.
என் ராசி எது என்று எப்படி அறிவது?
நீங்கள் பிறந்தபோது சந்திரன் இருந்த ராசியே உங்கள் ஜென்ம ராசி. உங்கள் ஜென்ம நட்சத்திரம் தெரிந்தால், இந்தப் பக்கத்தில் உள்ள நட்சத்திர அட்டவணையில் அதன் ராசியைப் பார்க்கலாம்; இல்லையெனில் பிறந்த விவரங்களைக் கொண்டு இலவச தமிழ் ஜாதகம் கணித்துப் பாருங்கள்.
சந்திராஷ்டமம் என்றால் என்ன?
உங்கள் ராசிக்கு 8-ஆம் ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் சுமார் இரண்டே கால் நாட்களே சந்திராஷ்டமம். மாதம் ஒருமுறை வரும் இந்த நாட்களில் முக்கியமான புதிய காரியங்கள், பயணங்கள், ஒப்பந்தங்களைத் தவிர்ப்பது வழக்கம். இன்று சந்திராஷ்டமம் உள்ள ராசி அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ளது.
ராசி பலன் எப்போது மாறும்?
சந்திரன் ஒரு ராசியைக் கடக்க சுமார் இரண்டே கால் நாட்கள் ஆகும். அது அடுத்த ராசிக்கு மாறும்போது ஒவ்வொரு ராசிக்கும் பலன் மாறும்; இந்தப் பக்கம் அதைத் தானாகக் கணித்துக் காட்டுகிறது.
இன்றைய ராசி பலன் – Astrology in Tamil
ePanchang-இன் இன்றைய ராசி பலன் (Astrology in Tamil) பக்கம், சந்திரன் இப்போது இருக்கும் இடத்தைக் கணித்து மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ஒவ்வொரு ராசிக்கும் இன்றைய பலனைத் தமிழில் தருகிறது. இன்று சந்திராஷ்டமம் உள்ள ராசியும் அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ளது.


